அறிந்து கொள்ளுங்கள்

அந்த அம்சம் இப்போ ஐ.ஒ.எஸ்.-லும் வந்தாச்சு.. வாட்ஸ்அப் அசத்தல்

Published On 2024-01-30 14:01 GMT   |   Update On 2024-01-30 14:01 GMT
  • முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது.
  • ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் இந்த வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஸ்கீ அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப்-ஐ பாஸ்வேர்டு இன்றி பயோமெட்ரிக் மூலம் லாக்-இன் செய்யும் வசதியை வழங்குகிறது. முன்னதாக இதே போன்ற வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில், தற்போது ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதி வழங்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.24.2.73 வெர்ஷனில் பாஸ்கீ அம்சத்திற்கான வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

 


பாஸ்கீ அம்சம் ஹார்டுவேர் சார்ந்து இயங்கும் அம்சம் ஆகும். இது ஃபிடோ அலையன்ஸ் மூலம் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உடனான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் டச் ஐ.டி. அல்லது ஃபேஸ் ஐ.டி. மூலம் சைன் இன் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பாஸ்கீ விவரங்கள் கூகுளின் பாஸ்வேர்டு மேனேஜரில் சேமிக்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வாட்ஸ்அப் பாஸ்கீ அம்சம் முதலில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் பீட்டா வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் மற்ற பயனர்களுக்கும் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

Tags:    

Similar News