அறிந்து கொள்ளுங்கள்

இதை தான் ஒட்டிட்டு இருந்தீங்களா? டைட்டானியத்தால் வசமாக சிக்கிய சாம்சங்

Published On 2024-02-06 12:48 GMT   |   Update On 2024-02-06 12:48 GMT
  • சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தியது.
  • ஐபோன் 15 ப்ரோ சீரிசில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் அலுமினியத்திற்கு மாற்றாக டைட்டானியம் பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஆப்பிள் நிறுவனம் டைட்டானியம் பயன்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், முன்னணி யூடியூபரான ஜாக் நெல்சன் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக பிரித்து, அதன் உறுதித்தன்மையை சோதனைக்கு உட்படுத்தினார். அதில், கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் குறைந்த தரம் கொண்ட டைட்டானியம் பயன்படுத்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

 


ஆப்பிள் தனது ஐபோன் 15 ப்ரோ சீரிசில் அதிக தரமுள்ள டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டியர் டவுன் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஸ்மார்ட்போனின் ஃபிரேம் XRF ஸ்கேன் செய்யப்பட்டதும், அதில் சாம்சங் நிறுவனம் இரண்டாம் தர டைட்டானியத்தை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தி இருக்கும் டைட்டானியத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 800-இல் துவங்கி ரூ. 1200 வரை இருக்கலாம். சாம்சங் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டைட்டானியத்தின் விலை ரூ. 250-இல் துவங்கி ரூ. 400 வரை இருக்கலாம் என்று நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News