அறிந்து கொள்ளுங்கள்

விரைவில் இந்தியா வரும் புது ஸ்மார்ட்போன் - வேற லெவல் டீசர் வெளியிட்ட ரியல்மி

Published On 2024-02-16 13:43 GMT   |   Update On 2024-02-16 13:43 GMT
  • மலேசியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருந்தது.
  • விரைவில் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாகவே ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசருடன் #OneMorePlus என்ற ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது என்பதை கூறும் வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

 


புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றும் ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 அப்கிரேடுகள் வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் லெதர் டெக்ஸ்ச்சர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் 50MP சோனி LYT600 பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு லென்ஸ்கள், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News