புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன விவரங்கள்.. மலிவு விலை மாடலுக்கு ரெடியாகும் ரெட்மி

Published On 2024-02-05 10:09 GMT   |   Update On 2024-02-05 10:09 GMT
  • ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என தகவல்.
  • விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்படலாம்.

ரெட்மி A2 வரிசையில் சியோமி நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி A3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

புதிய ரெட்மி A3 ஸ்மார்ட்போன் பல்வேறு ஆப்பிரிக்கா வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் வாட்டர் டிராப் ஸ்டைல் கொன்ட நாட்ச் வழங்கப்படுகிறது.

இது தொடர்பான வலைதள விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் இதில் 6.71 இன்ச் HD+ 1600x720 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், விர்ச்சுவல் ரேம் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News