பட்ஜெட் விலை.. விரைவில் இந்தியா வரும் போக்கோ C65
- போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம்.
- போக்கோ C65 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
போக்கோ பிராண்டின் போக்கோ C65 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமான போக்கோ C65 விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகிறது. அதன்படி டிசம்பர் 15-ம் தேதி போக்கோ C65 இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை போக்கோ இந்தியா பிராண்டு தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது. போக்கோ C65 டீசர்களில் இந்த மாடல் அதன் சர்வதேச வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ C65 அம்சங்கள்:
6.74 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
50MP பிரைமரி கேமரா
2MP மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக், வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்