புதிய கேஜெட்டுகள்

ப்ளூடூத் காலிங் வசதியுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-01-22 04:15 GMT   |   Update On 2024-01-22 04:15 GMT
  • புது ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.
  • இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ், ப்ளூடூத் காலிங், உடல் ஆரோக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் அதிக உறுதியான உணர்வை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. பயனர்கள் இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

 


நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தும் போது ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

விலையை பொருத்தவரை நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எலைட் மிட்நைட் கோல்டு, எலைட் பிளாக் மற்றும் எலைட் சில்வர் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News