மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சாம்சங்

Published On 2024-03-04 13:35 GMT   |   Update On 2024-03-04 13:35 GMT
  • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6 கொண்டிருக்கிறது.
  • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கேலக்ஸி F15 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ 90Hz AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, பன்ச் ஹோலில் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6 கொண்டிருக்கிறது.

 

புதிய கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனிற்கு நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு அப்டேட்கள், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி F15 5ஜி அம்சங்கள்:

6.6 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்

ARM மாலி-G57 MC2 GPU

4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யு.ஐ. 6

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா

5MP அல்ட்ரா வைடு கேமரா

2MP மேக்ரோ சென்சர், எல்.இ.டி. ஃபிளாஷ்

13MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக்

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

 


இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் ஆஷ் பிளாக், ஜேசி கிரீன் மற்றும் குரூவி வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர், தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களில் மார்ச் 11-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடியும், எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 1299 மதிப்புள்ள சார்ஜரை ரூ. 299 விலையில் வாங்கிட முடியும்.

Tags:    

Similar News