நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவித்த சியோமி
- ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 4ஜி மற்றும் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அறிவிப்பு காரணமாக இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இரு மாடல்களுக்கான விலை குறைப்பு மார்ச் 8-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பு விவரங்கள்:
ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 14 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.
தற்போது விலை குறைப்பின் படி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இவற்றின் விலை முறையே ரூ. 10 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. குறைக்கப்பட்ட விலையில் இருந்து ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இவற்றின் விலை ரூ. 9 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் மாறியுள்ளது.
இந்திய சந்தையில் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 9 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 11 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது இவற்றின் விலை ரூ. 9 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 10 ஆயிரத்து 499 என்று மாறியுள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு மார்ச் 8-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.