மொபைல்ஸ்

கோப்புப்படம் 

நோக்கியா நிலைமை அவ்வளவு தானா? ஹெச்.எம்.டி. பிரான்டிங்கில் உருவாகும் புது ஸ்மார்ட்போன்

Published On 2024-01-20 09:35 GMT   |   Update On 2024-01-20 09:35 GMT
  • ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்படலாம்.
  • நோக்கியா பிரான்டு போன்களை ஹெச்.எம்.டி. விற்பனை செய்து வருகிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது சொந்த பிரான்டிங்கில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதுவரை நோக்கியா பிரான்டிங்கில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஹெச்.எம்.டி.-யின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் N159V எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் பிளாஸ்டிக் ரியர் பேனல், வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் இடம்பெற்று இருக்கும் என தெரியவந்துள்ளது.

 


தற்போது வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி ஹெச்.எம்.டி.-யின் முதல் ஸ்மார்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் டிஸ்ப்ளேவின் மத்தியில் பன்ச் ஹோல் டிசைனில் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஹெச்.எம்.டி. பிரான்டிங்கில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் தலைமை செயல் அதிகாரி ஜீன் ஃபிரான்கோஸ் பாரில் கடந்த ஆண்டே தகவல் தெரிவித்து இருந்தார். கடந்த 2016 முதல் நோக்கியா பிரான்டிங்கில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News