மொபைல்ஸ்

கோப்புப்படம் 

ஐபோன் போன்ற டிசைன் - இணையத்தில் லீக் ஆன பிக்சல் 9 புகைப்படங்கள்

Published On 2024-01-25 05:41 GMT   |   Update On 2024-01-25 05:41 GMT
  • பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன் வழங்கப்படுகிறது.
  • அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி சில மாதங்களே ஆகியுள்ளது. இந்த நிலையில், பிக்சல் 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கிவிட்டன. அதில், புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

தற்போது லீக் ஆகி இருக்கும் ரெண்டர்களின் படி கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் கிடைக்கும் என்றும் இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய மாடலில் கேமரா மாட்யுல் டிசைனை கூகுள் மாற்றலாம் என்று கூறப்படுகிறது. இத்துடன் பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.


 

புதிய ரெண்டர்களின் படி பிக்சல் 9 மாடலின் டிசைன் ஐபோன் 15 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யுல், மூன்று சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஒ.எஸ். மற்றும் கூகுள் நிறுவத்தின் டென்சார் G4 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News