கணினி

இந்தியாவில் சியோமி பேட் 5 மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு

Published On 2023-06-12 07:46 GMT   |   Update On 2023-06-12 07:46 GMT
  • சியோமி பேட் 5 மாடல் இரண்டு வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேட் 6 ஆன்ட்ராய்டு டேப்லெட் மாடலை நாளை (ஜூன் 13) அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டேப்லெட் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி பேட் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் சியோமி பேட் 5 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சியோமி பேட் 5 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 1000, 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 500 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் புதிய சியோமி பேட் 5 மாடலை முறையே ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி பேட் 5 அம்சங்கள்:

புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான ஆப்ஷன்களை இயக்க முடியும். சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News