கணினி

விலை ரூ. 6 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமான புதிய QLED டிவி

Published On 2023-07-20 02:15 GMT   |   Update On 2023-07-20 02:15 GMT
  • Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது.
  • புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

Vu நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய Vu ஸ்மார்ட் டிவிக்களின் விலையும், சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் Vu மாஸ்டர்பீஸ் QLED என்று அழைக்கப்படுகின்றன.

புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 85 இன்ச் மற்றும் 95 இன்ச் என இருவித ஸ்கிரீன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் குவான்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் 4K ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-பிட் கலர் டெப்த் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டால்பி விஷன் IQ, HDR 10+, HLG மற்றும் MEMC வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த டிவிக்களில் 4K தரவுகளை அப்-ஸ்கேலிங் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் AMD ஃபிரீ-சின்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி-க்களில் ஏரோ-ஸ்பேஸ் தர மெட்டல் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. ஆடியோவை பொருத்தவரை நான்கு மாஸ்டர் ஸ்பீக்கர்கள், ஒரு சப்-வூஃபர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவை 204 வாட் சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் மற்றும் அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. Vu மாஸ்டர்பீஸ் QLED ஸ்மார்ட் டிவிக்கள் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றன.

இத்துடன் கூகுள் டிவி ஒஎஸ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, டூயல் பேன்ட் வைபை, நான்கு HDMI, இரண்டு USB போர்ட்கள் மற்றும் ஈத்தர்நெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய Vu மாஸ்டர்பீஸ் QLED டிவி 95 இன்ச் மாடல் விலை ரூ. 6 லட்சம் என்றும் 85 இன்ச் மாடல் விலை ரூ. 3 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை Vu அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News