கணினி

டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி இதெல்லாம் தெரியுமா?

Published On 2023-06-20 05:59 GMT   |   Update On 2023-06-20 05:59 GMT
  • டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது.
  • புதிய செயலி குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தகவல்.

டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க், தனது நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்காக பிரத்யேக வீடியோ ஆப் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தார். டுவிட்டர் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

'எங்களுக்கு ஸ்மார்ட் டிவி-க்கான பிரத்யேக டுவிட்டர் வீடியோ ஆப் வேண்டும்,' என்று டுவிட்டர் பயனர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க்- 'இது வந்து கொண்டு இருக்கிறது,' என பதில் அளித்தார். அந்த வகையில் புதிய டுவிட்டர் வீடியோ ஆப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்ப்போம்..

 

- மற்ற நிறுவனங்களை போன்றே டுவிட்டர் நிறுவனமும் வீடியோக்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த வீடியோ ஆப் டுவிட்டர் நிறுவனம் வீடியோ தரவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை உணர்த்துகிறது.

- புதிய திட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் குறுகிய கால வீடியோ ஃபார்மேட்களில் கவனம் செலுத்துகிறது. யூடியூப் ஷாட்ஸ், டிக்டாக் போன்ற சேவையை டுவிட்டர் நிறுவனமும் அறிமுகம் செய்யலாம்.

- வீடியோ பிரிவில் கவனம் செலுத்துவதற்காக டுவிட்டர் நிறுவனம் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தான் பெரிஸ்கோப் லைவ் ஸ்டிரீமிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

- வீடியோக்களை பார்ப்பது மற்றும் பகிர்வது தொடர்பாக பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களை டுவிட்டர் வழங்கி வருகிறது.

- புதிய செயலி டுவிட்டர் மட்டுமின்றி அதன் பயனர்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. மேலும் இது வருவாய் வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

Tags:    

Similar News