கணினி

2K டிஸ்ப்ளே கொண்ட டிசிஎல் டேப் 10 ஜென் 2 விரைவில் அறிமுகம்

Published On 2023-06-29 02:12 GMT   |   Update On 2023-06-29 02:12 GMT
  • டிசிஎல் நெக்ஸ்ட்பேப்பர் 11 மற்றும் டேப் 11 மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
  • டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடலில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே, 8-கோர் பிராசஸர் உள்ளது.

டிசிஎல் நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில், தற்போது டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடல் விரைவில் இணைய இருக்கிறது. முன்னதாக டிசிஎல் அறிமுகம் செய்த நெக்ஸ்ட்பேப்பர் 11 மற்றும் டேப் 11 மாடல்கள், சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய டேப்லெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

 

புதிய டிசிஎல் டேப் 10 ஜென் 2 மாடலில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே, 8-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 4ஜி எல்டிஇ வசதி, ஆக்டிவ் ஸ்டைலஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் 2025 ஜூலை மாதம் வரை செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று கூறப்படுகிறது.

6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் டேப் 10 ஜென் 2 மாடல் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட் வாங்க நினைப்போருக்கு இந்த மாடல் பயனுள்ளதாக இருக்கும். வரும் வாரங்களில் இந்த மாடலின் வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News