கணினி

லாகிடெக் M240 சைலன்ட் ப்ளூடூத் மவுஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-06-18 04:15 GMT   |   Update On 2023-06-18 04:15 GMT
  • இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • இதன் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது.

லாகிடெக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M240 ப்ளூடூத் மவுஸ்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லாகிடெக் M240 சைலன்ட் ப்ளூடூத் மவுஸ் லாகிடெக் இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் குறைந்த விலை ப்ளூடூத் மவுஸ் ஆகும். இது பேர்-அன்ட்-பிளே வயர்லெஸ் மவுஸ் ஆகும். இது பயன்படுத்த சீரான அனுபவத்தை வழங்குகிறது.

லாகிடெக் M240 ப்ளூடூத் மவுஸ் அதிவேக ப்ளூடூத் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதனை கம்ப்யுட்டர் மற்றும் டேப்லெட் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். இதன் வயர்லெஸ் ரேன்ஜ் 33 அடிகள் ஆகும். இந்த ப்ளூடூத் மவுஸ் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. நிறங்களை பொருத்தவரை இந்த ப்ளூடூத் மவுஸ் கிராஃபைட், ரோஸ் மற்றும் ஆஃப் வைட் போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

 

இந்த ப்ளூடூத் மவுஸ் 18 மாதங்களுக்கான பேட்டரி லேஃப் கொண்டிருக்கிறது. மேலும் பேட்டரி பேக்கப்-ஐ மேம்படுத்தும் நோக்கில் ஆட்டோ ஸ்லீப் வசதி உள்ளது. M240 சைலன்ட் போன்ற மவுஸ் பயன்படுத்தும் போது லேப்டாப் 30 சதவீதம் வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மவுஸ்-இல் அல்ட்ரா-குயெட் க்ளிக் மூலம் மவுஸ் க்ளிக் செய்யும் போது ஏற்படும் சத்தத்தை 90 சதவீதம் வரை குறைக்கிறது.

லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ்-ஐ இடது கை மற்றும் வலது கை பழக்கம் கொண்டவர்களும் எளிதில் பயன்படுத்த முடியும். இந்த மவுஸ் கார்பன் நியூட்ரல் சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பிளாஸ்டிக் பாகங்களில் 48 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டவை ஆகும்.

புதிய லாகிடெக் M240 சைலன்ட் மவுஸ் இந்தியா முழுக்க லாகிடெக் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1595 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News