கணினி

2023 எல்ஜி கிராம் பிரீமியம் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-06-16 02:20 GMT   |   Update On 2023-06-16 02:20 GMT
  • எல்ஜி நிறுவனம் தனது கிராம் சீரிஸ் லேப்டாப்களை அப்டேட் செய்து இருக்கிறது.
  • 2023 கிராம் சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் உள்ளன.

எல்ஜி நிறுவனம் 2023 கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராம் சீரிஸ் மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அதிக விலை கொண்ட புதிய எல்ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கின்றன.

புதிய லேப்டாப்கள் எல்ஜி கிராம் 2023, கிராம் ஸ்டைல், கிராம் 2-இன்-1 மற்றும் எல்ஜி அல்ட்ரா பிசி என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ், SSD ஸ்டோரேஜ், அதிகபட்சம் 17 இன்ச் ஸ்கிரீன், 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி கிராம் 2023 சீரிஸ் அம்சங்கள்:

எல்ஜி கிராம் 2023 மாடலில் இன்டெல் EVO சான்று பெற்ற 13th Gen கோர் பிராசஸர், LPDDR5 6000 MHz ரேம், மற்றும் Gen.4 NVMe (x2) ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 16:10 WQXGA IPS ஸ்கிரீன் மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

எல்ஜி கிராம் ஸ்டைல் மாடல், அதன் பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் ஸ்டைலான லேப்டாப் ஆகும். இதில் 14 இன்ச் WQXGA+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி NVMe SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் டால்பி அட்மோஸ் சப்போர்ட், 72 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

எல்ஜி கிராம் 2-இன்-1 மாடலில் 16 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதனை லேப்டாப் மற்றும் டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 ரேம், 2 டிபி NVMe Gen4 SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

எல்ஜி அல்ட்ரா பிசி அதிக ரெசல்யூஷன் கொண்ட WUXGA டிஸ்ப்ளே, ஆன்டி கிளேர் IPS பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ், மெல்லிய பெசல்கள் உள்ளன. இந்த லேப்டாப் AMD ரைசன் 7000 சீரிஸ் பிராஸர், AMD ரேடியான் 7 கிராஃபிக்ஸ், 16 ஜிபி DDR4 ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 72 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

 

விலை விவரங்கள்:

எல்ஜி கிராம் 14 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம்

எல்ஜி கிராம் 16 இன்ச் மற்றும் 17 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990

எல்ஜி கிராம் ஸ்டைல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990

எல்ஜி கிராம் 2-இன்-1 துவக்க விலை ரூ. 2 லட்சத்து 05 ஆயிரம்

எல்ஜி அட்ரா பிசி துவக்க விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் 

Tags:    

Similar News