தமிழ்நாடு

கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டியில் 5 நாள் முகாம்

Published On 2024-03-28 08:23 GMT   |   Update On 2024-03-28 08:23 GMT
  • 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
  • தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வந்தபோது தோடரின மக்கள் வசிக்கும் முத்தநாடு கிராமம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் 18-ந்தேதி சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது 5 நாட்கள் சுற்றுப்பயணமாக மீண்டும் ஊட்டிக்கு வருகிறார். இதற்காக அவர் நாளை மறுநாள் (30-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்க்கமாக மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

தொடர்ந்து 31-ந்தேதி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு அவர் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிடுகிறார். பின்னர் 1-ந்தேதி ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

தொடர்ந்து 2-ந்தேதி குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். 3-ந்தேதி குந்தாவில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு செல்கிறார். பின்னர் 4-ந் தேதி காலை 11 மணியளவில் ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மார்க்கமாக சென்னை சென்றடைகிறார்.

தமிழக கவர்னர் பயணத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News