தமிழ்நாடு

பிளஸ்-2 துணைத்தேர்வு: அடுத்த மாதம் 24-ந்தேதி தொடங்குகிறது

Published On 2024-05-08 03:22 GMT   |   Update On 2024-05-08 03:22 GMT
  • துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
  • தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை:

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 594 பேர் எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 41 ஆயிரத்து 410 பேர் தோல்வியை தழுவி இருந்தனர்.

இந்த நிலையில் தேர்வை எழுதாத, தோல்வியை தழுவிய மாணவ-மாணவிகளுக்கு அடுத்தகட்ட வாய்ப்பாக துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 24-ந்தேதி முதல் வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்த துணைத்தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் வருகிற 16-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரையிலான நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதேபோல் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைத்துள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News