தமிழ்நாடு

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

Published On 2024-04-29 05:44 GMT   |   Update On 2024-04-29 05:44 GMT
  • 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார்.
  • 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் நேற்று சிபிசிஐடியிடம் ஒப்படைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

ஆனால், கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News