தமிழ்நாடு

சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து அறிக்கையளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-05-08 13:27 GMT   |   Update On 2024-05-08 13:27 GMT
  • நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர்.
  • சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் புகார்

யூடியூபரான சவுக்கு சங்கர் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனியில் கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.

ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் நீதிமன்றகாவல் அளித்து உத்தரவிட்டது. சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறையில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும், சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சவுக்கு சங்கருக்கு மே 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மே 17-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று கஞ்சா வழக்கில் ஆஜர்படுத்த மதுரை அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.

அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள், சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

தேனியில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தபோது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கி சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News