இந்தியா

ஆன்லைனில் 'கேக்' ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி

Published On 2024-05-01 06:35 GMT   |   Update On 2024-05-01 06:35 GMT
  • வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.
  • பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.

உணவு பொருட்கள் முதல் பிறந்தநாள் கேக் வரை பல பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பெண் தனது சகோதரி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக ஸ்விக்கியில் கேக் ஆர்டர் செய்துள்ளார்.

அப்போது வீட்டில் 3 பேர் மட்டுமே இருந்ததால் 200 கிராம் கேக் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். அந்த கேக்கில் அதிக வாசகம் எதுவும் வேண்டாம் என கருதிய அவர், தனது ஆர்டருடன் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' சேர்த்து அனுப்பவும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் பேக்கரி ஊழியர்கள், இதை தவறாக புரிந்து கொண்டு அவருக்கு ஆர்டர் கேக்கில் 'ஹேப்பி பர்த்டே ஸ்டிக்' என எழுதி கொடுத்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, நாங்கள் ஆச்சரியம் கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்விக்கி எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். அவரது இந்த பதிவு இன்ஸ்டாகிராமில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது.



Tags:    

Similar News