இந்தியா

பாலியல் புகார் : ராஜ் பவனில் போலீஸ் விசாரணைக்கு தடை விதித்த கவர்னர்

Published On 2024-05-03 10:16 GMT   |   Update On 2024-05-03 10:16 GMT
  • கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்பவர் ஆனந்த் போஸ். மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.



இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க உள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீசார் 'ஹரே தெரு' காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக கவர்னர் மீது புகார் கொடுத்தார்.




அதில் தன்னை கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பிரசார பயணத்திற்கு வந்துள்ளதால் தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய வரும் போலீசாரை ராஜ் பவனுக்குள் நுழைய கவர்னர் தடை விதித்து உள்ளார்.

Tags:    

Similar News