இந்தியா
null

அதானியின் நிலக்கரி ஊழலுக்காக மோடிக்கு எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன- ராகுல்காந்தி

Published On 2024-05-22 10:37 GMT   |   Update On 2024-05-22 11:06 GMT
  • நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.
  • இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது.

2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.

2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ₹2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ₹7,650 என அதானி நிறுவனம் விற்றுள்ளது.

இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதானி நிறுவனத்தின் நிலக்கரி ஊழல் தொடர்பாக தனியார் செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"பாஜக ஆட்சியின் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல வருடங்களாக நடந்து வரும் இந்த ஊழலின் மூலம் மோடியின் நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்

அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?

ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்து இந்த ஊழல் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News