பொது மருத்துவம்

தலைமுடியை வாருவதால் இத்தனை நன்மைகளா?

Published On 2024-05-08 10:16 GMT   |   Update On 2024-05-08 10:16 GMT
  • முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள்.
  • தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும்.

தலைமுடியை தினமும் முறையாக வாருவது பல நன்மைகளை அளிக்கிறது. ஆரோக்கியமான முடியை பெற தினமும் தலைமுடியை வாருவது அவசியமாகும்.

முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள். தலைமுடியை வாருவதற்கு சீப்பு பயன்படுத்துவது பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல அறிவியல் ரீதியான நன்மைகளையும் கொண்டுள்ளது. தலைமுடியை வாருவதால் கிடைக்கும் நன்மைகள்:

* தலைமுடியை வாரும்போது சீப்பு மண்டை ஓட்டுப்பகுதியில் உராய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாகவும் அது அனைத்து பகுதியில் சீராக பரவவும் உதவும்.

* தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க இது உதவும். இதனால் புது செல்கள் உற்பத்தியாகி தலைமுடி நன்கு வளரும்.

 

* சிலர் விடுமுறை நாள்களில் போட்ட பின்னலை (அ) கொண்டையை அவிழ்க்கவே மாட்டார்கள். தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும். மேலும் வியர்வை தேங்கி, பிசுபிசுப்பு உண்டாகும்.

* தலைமுடியை வாராமல் இருப்பதால் பொடுகுத்தொல்லை, பேன் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

Tags:    

Similar News