பொது மருத்துவம்
null

8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் - ஆய்வு

Published On 2024-05-03 07:46 GMT   |   Update On 2024-05-03 07:47 GMT
  • மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

வேலையில் ஏற்படும் சிரமங்கள், குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில மனக்கசப்புகள், படிப்பிலும் மற்ற நண்பர்களிடம் ஏற்படும் சிறு - சிறு சண்டைகள், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் என கூறி கொண்டே போகலாம். இந்த மாதிரியான காரணங்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபம் என்பது சாதாரணமாக வந்து விடுகிறது.

சில நேரங்களில் கோபம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருகிறது. அதில், சிலர் மரணமும் அடைகின்றனர்.

இதுபோன்ற உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, சில நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான, உணர்ச்சிகரமான அனுபவங்கள், இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்பது குறித்து ஆய்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கின.

இந்த ஆய்வில் கோபத்தின் காரணமாக பதட்டமான நிலை, சோகமான உணர்வுகளால் இதய நோய் அதிகமாக உருவாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.


அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கோபத்தின் சிறிய வெடிப்புகள் கூட இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தூண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, 8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது தான். எனவே, கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

Tags:    

Similar News