குழந்தை பராமரிப்பு

நவம்பர் 7-ந்தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினம்

Published On 2023-11-06 09:59 GMT   |   Update On 2023-11-06 09:59 GMT
  • முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை.
  • இறப்பு விகிதத்தை குறைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி பச்சிளம் குழந்தைகள் (சிசு) பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பதும், அவர்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் இந்த நாளின் நோக்கமாகும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்முதலில் ஐரோப்பா தொடங்கியது.

பிரசவத்திற்குப் பிறகு, போதுமான கவனிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பிறந்த முதல் மூன்று மாதங்கள், குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை. இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் பெற்றோருடன் நல்ல தொடர்பை உருவாக்குகிறார்கள். மேலும் குழந்தையின் செவிப்புலன், பார்வை, கை, கால்கள் மற்றும் தகவல் தொடர்பு மேம்படும் என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த மாதங்கள் மிகவும் முக்கியமானது.

ஐக்கிய நாடுகள் சபையின் பச்சிளம் குழந்தை இறப்பு அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டு இந்தியாவில் 7 லட்சத்து 21 ஆயிரம், குழந்தைகள் இறந்ததாக கண்டறிந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு உலகளவில் பிறந்த முதல் மாதத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, தற்போது குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 100-ல்இருந்து ௧௦ ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு சிசு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக `ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் உரிமையை உறுதி செய்தல்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நாட்டின் எதிர் காலம். அவர்களுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்குவது ஒவ்வொருவருடைய கடமை.

Tags:    

Similar News