வழிபாடு
null

இன்று பவுமா அஸ்வினி... ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபட வேண்டிய நாள்

Published On 2024-05-07 03:37 GMT   |   Update On 2024-05-07 07:11 GMT
  • வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
  • தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

பவுமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்குப் பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பவுமாஸ்வினி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று

செவ்வாய்க்கிழமை பவுமா அஸ்வினி தினமாகும். மிகவும் அரிதான இந்த நாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான விரைவான நன்மைகளைத் தரும். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரமும் ஸ்ரீ நரசிம்மரை தேவதையாகக் கொண்ட செவ்வாய் கிழமையும் ஒன்று சேரும் தினமான இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் இன்று காலை ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அப்போது தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

பூஜை முடிந்ததும் அந்த நிவேதனத்தை சுமார் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குத் தந்து சாப்பிடச் செய்யலாம். மேலும் எப்போதும் ஆத்ம விசாரம் செய்துகொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் ஞானிகளை அவரது சமாதியை வணங்கி அனுக்கிரகம் பெறலாம். இதனால் சிறந்த ஞாபக சக்தியும், படிப்பில் அறிவில் முன்னேற்றமும் கிடைக்கும்.

Tags:    

Similar News