வழிபாடு

இன்று கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி

Published On 2024-05-07 03:20 GMT   |   Update On 2024-05-07 03:20 GMT
  • இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.
  • காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.

இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.நமது பாவங்களை எளிதாக போக்கிக் கொள்ள நம் சாஸ்திரங்களில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் எமதர்ப்பணமும் ஒன்று. இந்த எமதர்ப்பணத்தை கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி திதி நாளில் செய்வது மிகவும் நல்லது.

இன்று கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினமாகும். இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது. இன்று எம தர்ப்பணம் செய்வதால் நாம் பிறந்தது முதல் செய்துள்ள அனைத்து பாவங்களும் விலகும்.

காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும். எமன் அனைத்து ஜீவனையும் அடக்குபவர். பித்ருக்களுக்கும் தர்மங்களுக்கும் அரசன். விவஸ்வான் என்னும் சூரியனின் மகன், கையில் தண்டத்தைப் பிடித்திருப்பவர், காலனின் வடிவம். பிரேதங்களுக்குத் தலைவன், மரணத்தை அளிப்பவன், பாவங்களை போக்குபவன், கிருதாந்தகனான எமன் எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்.

கருப்புமலைக்கு ஒப்பானவரே ஸ்ரீ ருத்ரனின் கோபத்தில் இருந்து தோன்றியவரே! காலத்திற்குத் தகுந்தவாறு தண்டனையை அளிக்க கையில் தண்டத்தைத் தாங்கியவரே! செல்வங்களுக்கு அதிபதியே விவஸ்வானின் மகளான வைவஸ்வத மகாராஜ இவ்வாறு சொல்லி தர்ப்பணம் செய்வதால் அனைத்து நன்மைகளும் கிட்டும். நோய்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

Tags:    

Similar News