இஸ்லாம்
மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழா கொடியேற்றம் நடந்த போது எடுத்தபடம்.

தக்கலையில் ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா தொடங்கியது

Published On 2022-02-03 04:31 GMT   |   Update On 2022-02-03 04:31 GMT
தக்கலையில் மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
தக்கலையில் மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ரஜப் பிறை ஒன்று முதல் 18 வரை நடக்கும்.

இந்த ஆண்டு இவ்விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 14 நாட்தள் மவுலிது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவில் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மார்க்க பேருரை நடக்கும். இந்த மார்க்க பேருரையில் பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று பீரப்பா பற்றிய செய்திகளை தொகுத்து பல்வேறு சிந்தனைகளில் வழங்க உள்ளனர்.

7-ந்தேதி தொடங்கும் மார்க்க பேருரை ஒப்பில்லா மேலோன் என்ற தலைப்பிலும், 8-ந்தேதி ஆண்பிள்ளை சிங்கம் முகமதுவாம் என பல்வேறு தலைப்புகளில் பேருரைகள் நடக்கிறது. 14-ந்தேதி பீர்முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி நூல் புதிய பதிப்பு வெளியீடு நிகழ்ச்சி நடைக்கிறது.

நிகழ்ச்சிக்கு அபீமு தலைவர் அப்துல் ஜாபர் தலைமை தாங்குகிறார். துணைத் தலைவர் முகமது சலீம், பொருளாளர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிங்கப்பூர் ஜாமிஆ அற நிறுவன துணைத்தலைவர் முகமது சலீம் வெளியிட தக்கலை ஷபீருத்தீன், முகமது இர்பானுல்லா பெற்றுக்கொள்கின்றனர்.

தமிழ் பக்தி இலக்கிய மரபில் பீர் முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சி என்ற சிந்தனையில் முகமது அலி பேசுகிறார். 15-ந்தேதி பீர்முகமது அப்பா பாடி அருளிய ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். 16-ந்தேதி மாலையில் நேர்ச்சை வழங்குதலும், 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நிகழ்ச்சி நடக்கும்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் நெல்லை, திருவனந்தபுரம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் அப்துல் ஜாபர், செயலாளர் முஸ்தபா. துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபிக் மற்றும் உறுப்பினர்கள், விழா குழுவினர் இணைந்து செய்துள்ளனர்.
Tags:    

Similar News