இது புதுசு

வேற லெவல் அம்சங்களுடன் அப்டேட் ஆகும் செட்டாக் EV.. இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2024-01-02 13:46 GMT   |   Update On 2024-01-02 13:46 GMT
  • இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
  • இரண்டு வேரியண்ட்களை வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது. இந்த மாடல் பஜாஜ் செட்டாக் பிரீமியம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பஜாஜ் செட்டாக் பிரீமியம் ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

தற்போது செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரீமியம் வேரியண்ட் அப்டேட் செய்யப்படும் நிலையில், இரண்டு வேரியண்ட்களையும் வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

 


புதிய செட்டாக் பிரீமியம் வேரியண்ட் அறிமுகம் பற்றிய தகவலை பஜாஜ் நிறுவனம் தனது சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் பாகங்கள் பற்றிய டீசர்களும் வெளியிடப்பட்டன. டிஸ்ப்ளேவின் படி இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் ரைடிங் மோட்களும் வழங்கப்படுகிறது.

டீசர்களின் படி புதிய வேரியண்ட் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இதில் ஒற்றை பக்க முன்புற சஸ்பென்ஷன், ஸ்மார்ட் அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய வட்ட வடிவம் கொண்ட டிசைன் வழங்கப்படுகிறது. சீட், லைட்கள், ஃபுளோர்போர்டு மற்றும் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

Tags:    

Similar News