கார்

பவரும் இருக்கு ரேன்ஜூம் இருக்கு.. அசத்தும் சியோமியின் எலெக்ட்ரிக் கார்

Published On 2023-12-30 14:13 GMT   |   Update On 2023-12-30 14:13 GMT
  • சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
  • இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும்.

சீனாவை சேர்ந்த நுகர்வோர் எலெக்ட்ரிக் நிறுவனம் சியோமி எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குவது குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி வந்தது. அந்த வரிசையில், சியோமி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. SU7 என அழைக்கப்படும் சியோமி எலெக்ட்ரிக் கார் போர்ஷே டேகேன் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் சியோமி SU7 மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் உலகளவில் டாப் 5 கார் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.

 


புதிய சியோமி SU7 மாடலின் உற்பத்தி சீனாவில் உள்ள சியோமி ஆலையில் சோதனை அடிப்படையில் துவங்கிவிட்டது. இந்த எலெக்ட்ரிக் கார் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர்களுக்கு ஏற்றார்போல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று புதிய SU7 மாடல் ஒற்றை மற்றும் இரட்டை என இருவித டிரைவ் டிரெயின்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

சியோமி SU7 மாடலில் அந்நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஐ.சி. என்ஜின்களில் சக்திவாய்ந்த ஒன்றாக விளங்கும் V சீரிஸ் பெயர் கொண்டிருக்கின்றன. அதன்படி V6 மாடலில் 299 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 400 வோல்ட் ஆர்கிடெக்சரில் பயன்படுத்தப்படவுள்ளது.

 


V6s மோட்டார் 800 வோல்ட் ஆர்கிடெக்சரில் இயங்குகிறது. இது 75 ஹெச்.பி. பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவை இரண்டும் அதிகபட்சம் 21,000 rpm கொண்டிருக்கின்றன.

டூயல் மோட்டார் கொண்ட SU7 மாடலில் V6 மற்றும் V6s இணைந்து வழங்கப்படுகின்றன. இவை 673 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.78 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்படும் ஹைப்பர் என்ஜின் 679 ஹெச்.பி. பவர், 634 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதில் வழங்கப்படும் 101 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி சியோமியின் ரேபிட் சார்ஜிங் திறன் கொண்டு 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். 

Tags:    

Similar News