கார்

சிட்ரோயன் eC3 டாப் என்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-01-25 08:34 GMT   |   Update On 2024-01-25 08:34 GMT
  • டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
  • இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

சிட்ரோயன் நிறுவனம் தனது eC3 சீரிசில் புதிதாக டாப் என்ட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. eC3 மாடல் சிட்ரோயன் நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் ஹேச்பேக் ஆகும்.

புதிய eC3 ஷைன் வேரியன்ட் விலை ரூ. 13 லட்சத்து 20 ஆயிரம் என துவங்கி ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. விலை அடிப்படையில் இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

 


சிட்ரோயன் eC3 ஷைன் வேரியன்டில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, 15 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

இத்துடன் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News