கார்

ADAS வசதிகளுடன் டெஸ்டிங் செய்யப்படும் மாருதி eVX

Published On 2024-01-30 09:59 GMT   |   Update On 2024-01-30 09:59 GMT
  • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
  • கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாக தெரிகிறது.

மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் eVX மாடலை 2025 வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில், மாருதி eVX மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களின் படி மாருதி eVX மாடலில் ADAS சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மாருதி eVX கார் அறிமுகமாகும் போதே ADAS வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், ADAS லெவல் 1 அல்லது லெவல் 2 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

 


இந்த காரில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், கன்மெட்டல் நிறம் கொண்ட மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டர்கள், சி பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது. முன்னதாக eVX மாடல் 2023 ஜப்பான் மொபிலிட்டி விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Tags:    

Similar News