பைக்

கோப்புப்படம்

கிளாசிக் 350 புது வெர்ஷனை காட்சிப்படுத்திய ராயல் என்பீல்டு - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2024-02-01 10:38 GMT   |   Update On 2024-02-01 10:38 GMT
  • எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
  • 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அதிகம் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் ஃபிளெக்ஸ் ஃபியூவல் வெர்ஷனை காட்சிப்படுத்தி இருக்கிறது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படலாம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

தற்போது இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான பெட்ரோல் பன்க்-களில் பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு வாக்கில் இதனை 25 சதவீதம் வரை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

 


மற்ற மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில், ஃபிளெக்ஸ் ஃபியூவல் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் கிரீன் மற்றும் ரெட் நிற பெயின்டிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறங்கள் பெட்ரோல் டேன்க் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃபியூவல் மாடலிலும் 350சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News