பைக்

ரூ. 5.9 லட்சம் விலையில் ஹோண்டா NX500 அறிமுகம்

Published On 2024-01-19 16:01 GMT   |   Update On 2024-01-19 16:01 GMT
  • ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதில் 471சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் தனது முற்றிலும் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்- NX500-ஐ அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா NX500 மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் CB500X மாடலின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் ஒற்றை மிடில்வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலாக இது அமைந்துள்ளது.

 


புதிய ஹோண்டா NX500 மாடலில் 471சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட்/ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் டைமன்ட் ஃபிரேமில் வைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஷோவா SFF-BP யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், லின்க் டைப் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 296mm இரட்டை டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் 240mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எல்.இ.டி. லைட்டிங், 5 இன்ச் அளவில் டி.எஃப்.டி. மற்றும் ப்ளூடூத், நேவிகேஷன் வசதிகள் உள்ளன.

ஹோண்டா NX500 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வினியோகம் அடுத்த மாதம் துவங்கும் என தெரிகிறது. 

Tags:    

Similar News