பைக்

ஹூரோவின் 125சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2024-01-23 09:08 GMT   |   Update On 2024-01-23 09:08 GMT
  • எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய எக்ஸ்டிரீம் 125R மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 95 ஆயிரம் என்றும் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ. 99 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய எக்ஸ்டிரீம் 125R மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்றும் பின்புறம் ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில்வர், பிளாக் மற்றும் ரெட் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

 


இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.5 ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடலில் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், எல்.சி.டி. ஸ்கிரீன், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடல் டி.வி.எஸ். ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

Tags:    

Similar News