பைக்

கோப்புப்படம்

எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும்.. CNG பைக் உருவாக்கும் பஜாஜ்

Published On 2024-01-29 10:03 GMT   |   Update On 2024-01-29 10:03 GMT
  • விறப்னையை அதிகப்படுத்த பஜாஜ் திட்டம்.
  • 373சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பிரிபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் செட்டாக் EV-யின் புது வேரியன்ட் மற்றும் பல்சர் NS400 மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

இத்துடன் சி.என்.ஜி. திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவில் குறிப்பிடத்தக்க மாடலாக செட்டாக் இருந்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் மாதாந்திர விறப்னையை 15 ஆயிரம் யூனிட்களாக அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

 

கோப்புப்படம்


அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் செட்டாக் EV ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல் மூலம் வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் பஜாஜ் நிறுவனம் குறிப்பிடத்தக்க நிலையை அடைய உதவும் என தெரிகிறது.

புதிய செட்டாக் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வேரியன்ட்-ஐ விட குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வரிசையில், பல்சர் NS400 மாடல் பல்சர் சீரிசில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருந்து வருகிறது. இதில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த என்ஜின் 40 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய பல்சர் NS400 மோட்டார்சைக்கிள் கே.டி.எம். டியூக் 390 மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

Tags:    

Similar News