ஆட்டோ டிப்ஸ்

கோப்புப்படம் 

இணையத்தில் லீக் ஆன ஸ்பை படங்கள் - சத்தமின்றி உருவாகும் கியா கரென்ஸ் EV

Published On 2023-04-14 04:15 GMT   |   Update On 2023-04-14 04:15 GMT
  • கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்பிவி மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • கரென்ஸ் எம்பிவி மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

கியா நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் கரென்ஸ் எம்பிவி மாடலை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், தென் கொரிய நாட்டில் சோதனை செய்யப்படும் கியா கரென்ஸ் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. புதிய கரென்ஸ் எம்பிவி மாடல் கிரெட்டா EV வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

கரென்ஸ் எம்பிவி எலெக்ட்ரிக் மாடல் ப்ரோடோடைப் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். கரென்ஸ் EV மாடல் தோற்றத்தில் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படு வரும் கரென்ஸ் எம்பிவி போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் என்பதால், இந்த மாடலில் ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

முழுமையான எலெக்ட்ரிக் கியா கரென்ஸ் மாடல் முற்றிலும் பிரத்யகேமான எலெக்ட்ரிக் வாகன டிசைன் அம்சங்களான அலாய் வீல்கள் மற்றும் இதர ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கரென்ஸ் EV மாடலின் பேட்டரி மற்றும் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த கார் கிரெட்டா EV மாடலை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்ட கிரெட்டா EV மாடல் 2025 வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரென்ஸ் எம்பிவி மாடல் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கரென்ஸ் EV மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரென்ஸ் மாடல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

Photo Courtesy: newcarscoops

Tags:    

Similar News