iFLICKS தொடர்புக்கு: 8754422764

முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்: 1-1-1858

இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது.

ஜனவரி 01, 2018 01:44

ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பை கடலில் விழுந்து 213 பேர் பலியான நாள்: 1-1-1978

ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பை கடலில் விழுந்து 213 பேர் பலியானார்கள்.இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-* 1928 – யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார். * 1935 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.

ஜனவரி 01, 2018 01:34

தமிழக எழுத்தாளரும் தமிழறிஞருமான ச. வே. சுப்பிரமணியன் பிறந்த தினம்: 31-12-1929

ச.வே. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 31 1929), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

டிசம்பர் 31, 2017 06:42

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள் (டிச.30- 2006)

பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 30, 2017 01:15

சிக்காகோவில் நாடக அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 பேர் பலி (டிச.30- 1903)

சிக்காகோவில் 1903-ம் ஆண்டு ஒரு நாடக நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று ஏற்பட்ட தீவிபத்தினால் 600 பேர் பலியாகினர்.

டிசம்பர் 30, 2017 01:15

இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா பிறந்த தினம்: 29-12-1942

ராஜேஷ் கண்ணா இந்தித் திரைப்பட நடிகர். இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதி. 1966-ம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969-ம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார்.

டிசம்பர் 29, 2017 00:55

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள்: 29-12-1993

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது.

டிசம்பர் 29, 2017 00:54

இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75,000 பேர் பலியான நாள்: 28-12-1908

இத்தாலியில் 1908ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 28, 2017 06:42

இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகிய நாள்: 28-12-1885

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது.

டிசம்பர் 28, 2017 06:35

உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள்: 27-12-1945

உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும்.

டிசம்பர் 27, 2017 05:23

பெனாசீர் பூட்டோ கொல்லப்பட்ட நாள்: 27-12-2007

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

டிசம்பர் 27, 2017 05:18

2,30,000 மக்களை விழுங்கிய ஆழிப்பேரலை 2004- டிச.26

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26-ம் தேதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது.

டிசம்பர் 26, 2017 04:40

பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் டிச.26- 1981

கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார்.

டிசம்பர் 26, 2017 04:37

சார்லி சாப்ளின் இறந்த தினம்: 25-12-1977

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார்.

டிசம்பர் 25, 2017 04:41

கிறிஸ்துமஸ் விழா: டிசம்பர் 25

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

டிசம்பர் 25, 2017 04:36

மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.

டிசம்பர் 24, 2017 05:05

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்: 23-12-1954

மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது. மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன் முதலாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1954-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 23, 2017 01:59

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் (டிச 22, 1887)

உலகத்தை வியக்கச் செய்த பெரும் கணித மேதை ராமானுஜன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் 1887-ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார்.

டிசம்பர் 22, 2017 05:56

இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் (டிச.22, 1851)

இந்தியாவின் முதலாவது சரக்கு ரெயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் 1851-ஆம் ஆண்டு இதே தேதியில் ஓடவிடப்பட்டது.

டிசம்பர் 22, 2017 05:52

கொலம்பியாவில் ஏற்பட்ட போயிங் விமான விபத்தில் 160 பேர் பலி (டிச.20- 1995)

அமெரிக்காவின் போயின் விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள மலை மீது மோதி 160 பேர் பலியானார்கள்.

டிசம்பர் 20, 2017 06:24

அணுக்கள் மூலம் முதற்தடவையாக மின்சாரம் தயாரிக்கப்பட்ட நாள்: 20-12-1951

வடக்கு அமெரிக்காவில் உள்ள ஐடஹோவில் உலகத்திலேயே முதற்தடவையாக அணு மூலம் உருவான மின்சாரம் கொண்டு விளக்கு எரிக்கப்பட்டது.

டிசம்பர் 20, 2017 06:24

5