search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிளப் உலகக்கோப்பை: ரொனால்டோ ‘ப்ரீ ஹிக்’ கோலால் ரியல் மாட்ரிட் சாம்பியன்
    X

    கிளப் உலகக்கோப்பை: ரொனால்டோ ‘ப்ரீ ஹிக்’ கோலால் ரியல் மாட்ரிட் சாம்பியன்

    கிளப் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் ‘ப்ரீ ஹிக்’ கோலால் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது.
    கிளப் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி பொது மைதானமான துபாயில் உள்ள ஷயத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி அணியான ரியல் மாட்ரிட்டும், பிரேசில் நாட்டின் சிறந்த அணியான க்ரேமியோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.



    ரியல் மாட்ரிட் அணியின் வேகத்திற்கு க்ரேமியோ வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ரொனால்டோ, இஸ்கோ, மோட்ரிக் போன்றோர் க்ரேமியோ கோல் எல்லையை நோக்கிய பந்தை அடித்துக் கொண்டே இருந்தனர். சுமார் 20 ஷாட்டுக்கள் அடித்திருப்பார்கள். பெரும்பாலான வாய்ப்புகளை க்ரேமியோ கோல் கீப்பர் தடுத்தார். ஏராளமான வாய்ப்புகள் கோல் கம்பத்தில் பட்டும், கோல் கம்பத்திற்கு மேலும் சென்றன. இதனால் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் விரக்தியடைந்தனர்.



    ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த நான்கு ஆண்டுகளில் 3-வது முறையாக ரியல் மாட்ரிட் கிளப் உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×