search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்
    X

    டி20 கிரிக்கெட் தொடரில் 19 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ்

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் டிவில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
    தென்ஆப்பிரிக்காவில் ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் டைட்டன்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதின.

    லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருக்கும் மழைக்குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 15 ஓவரில் 135 ரன்கள் எடுக்க வேண்டும் என டைட்டன்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.



    அந்த அணியின் தொடக்க வீரர் குயிண்டான் டி காக் 39 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த டி வில்லியர்ஸ் 19 பந்தில் அரைசதம் விளாசினார். கேப்டன் அல்பி மோர்கல் 16 பந்தில் 41 ரன்கள் சேர்க்க டைட்டன்ஸ் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


    18 பந்தில் 44 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸ் 19-வது பந்தை சிக்சருக்கு தூக்கி அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெறவும் வைத்தார்.
    Next Story
    ×