என் மலர்
செய்திகள்

லா லிகா: செவியாவை 2-1 என வீழ்த்தியது பார்சிலோனா; 600-வது ஆட்டத்தில் மெஸ்சி ஏமாற்றம்
லா லிகா கால்பந்து லீக் தொடரில் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பகோ அல்காசரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.
லா லிகா கால்பந்து லீக் தொடரில் நேற்றைய ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இது மெஸ்சி பார்சிலோனாவிற்காக விளையாடிய 600-வது ஆட்டமாகும்.
600-வது போட்டியில் மெஸ்சி கோல் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றபடி மெஸ்சியும் பலமுறை பந்தை கோல் எல்லையை நோக்கி கடத்திச் சென்றார். ஆனால் மெஸ்சியால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் பகோ அல்காசர் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் செவியா அணியின் குய்டோ பிசாரோ தலையால் முட்டி கோல் அடித்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் பகோ அல்காசர் மீண்டும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது.

அதன்பின் இரு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. போட்டியின்போது கனமழை பெய்தது. மழையையும் பொறுப்படுத்தாமல் வீரர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்கள்.
லா லிகாவின் மற்ற போட்டிகளில் லேகென்ஸ் அணியை 3-0 என வாலென்சியாவும், டெபோர்டிவோவை 1-0 என அட்லெடிகோ மாட்ரிட்டும், எஸ்பான்யோல் அணியை அலேவ்ஸ் 1-0 எனவும் வீழ்த்தின.

Next Story