search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    333 ரன் வித்தியாசத்தில் தோல்வி: ஏமாற்றத்தால் வெட்கமடைகிறேன் - வங்காளதேச கேப்டன்
    X

    333 ரன் வித்தியாசத்தில் தோல்வி: ஏமாற்றத்தால் வெட்கமடைகிறேன் - வங்காளதேச கேப்டன்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததன் மூலம் வெட்கப்படுகிறேன் என வங்காளதேச கேப்டன் சொல்கிறார்.
    தென்ஆப்பிரிக்கா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 496 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் வங்காள தேச அணியின் வெற்றிக்கு 424 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. ஆனால், மகாராஜ் (4), ரபாடா (3) ஆகியோரின் பந்து வீச்சில் 90 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு செசன் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போனது.

    இதனால் வங்காள தேச அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் வெட்கமடைகிறேன் என முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

    333 ரன்கள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து முஷ்டாபிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘இந்த தோல்வியால் வெட்கடைகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற மோசமான தோல்வியை நான் பார்க்கிறேன்.



    இந்த தோல்வி எப்படி நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற மோசமான பேட்டிங் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏராளமான வகையில் ஒரு அணி தோல்வியை சந்திக்கலாம். ஆனால், எங்கள் அணி இரண்டு செசன் விளையாடும் வகையில் திறமை பெற்றிருந்தோம்.

    டாஸ் வென்ற நாங்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் நாங்கள் 500 ரன்கள் எடுப்போம் என்ற உத்தரவாதம் கிடையாது. பந்து வீச்சை தேர்வு செய்தது அனைவர்களின் முடிவு. தென்ஆப்பிரிக்காவின் ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து எங்களுக்கு நன்றாக தெரியாது. இதனால் கணிப்பதற்கு கடினமாக உள்ளது. நாங்கள் கணித்ததை விட முற்றிலும் மாறுபட்ட ஆடுகளமாக இருந்தது.


    முதல் இன்னிங்சில் 199 ரன்கள் குவித்த டீன் எல்கர்

    எந்தவொரு பிளாட் பிட்ச் ஆக இருந்தாலும் இரண்டு மணி நேரம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். 4-வது இன்னிங்சை என்ன நிகழும் என்று நாம் யோசித்தால், முதல் இன்னிங்சில் 100 ரன்னில் அவுட்டாக வேண்டிய நிலை ஏற்படும். இது கடிமான மாறிவிடும் ’’ என்றார்.
    Next Story
    ×