search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர்
    X

    பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர்

    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் கவானி இடையே பெனால்டி கோல் அடிப்பதில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். இதற்காக பார்சிலோனாவிற்கு 220 மில்லியன் யூரோவை டிரான்ஸ்பர் பீஸாக வழங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்.

    அதிக தொகை கொடுத்து வாங்கியதால் பி.எஸ்.ஜி. அணியின் முன்னணி வீரராக நெய்மர் திகழ்கிறார். அதேவேளையில் அந்த அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வரும் உருகுவேயின் எடின்சன் கவானியும் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.



    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் நேற்று நள்ளிரவு லயன் அணியை எதிர்த்து விளையாடியது. நெய்மர் கோல் அடிக்க துள்ளும்போது லயன் அணி வீரர் அவரை தள்ளிவிட்டார். இதனால் பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இந்த வாய்ப்பு தனக்குத்தான் வரும் என நெய்மர் நினைக்கையில் கவானி பந்தை வைத்து பெனால்டி ஷாட் அடிக்க தயாரானார். இதை சற்றும் எதிர்பார்க்காத நெய்மர் கவானியுடன் விவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் கவானி பெனால்டி ஷாட் அடித்தார். ஆனால் லயன் அணி கீப்பர் அதை திறமையாகத் தடுத்துவிட்டார். என்றாலும் இறுதியில் பி.எஸ்.ஜி. 2-0 என வெற்றி பெற்றது.

    நெய்மர் - கவானி இடையிலான ஈகோ போர் பி.எஸ்.ஜி. அணியை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
    Next Story
    ×