search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணியை வீழ்த்தி வெயின் பிராவோ அணி சாம்பியன்
    X

    கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணியை வீழ்த்தி வெயின் பிராவோ அணி சாம்பியன்

    கரீபியின் பிரிமீயர் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரின்பாகுா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இந்த வருடத்திற்கான  சீசனின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது.

    இந்த இறுதிப் போட்டியில் கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் வெயின் பிராவோ பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டன் கிறிஸ் கெய்ல், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கெய்ல் 1 ரன்னிலும், லெவிஸ் 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மிகச்சிறந்த அதிரடி மன்னர்களான இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பேட்ரியாட்ஸ் அணி ரன் குவிக்க திணறியது.


    சந்தோசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்

    பிராத்வைட் 30 ரன்னும், மொகமது நபி 18 ரன்னும், காட்ரெல் 21 ரன்னும் எடுக்க பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 136 ரன்கள் என்ற எளிதாக இலக்கை நோக்கி நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக சுனில் நரைன், முன்றோ ஆகியோர் களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 3 ரன்னில் ஆட்ட இழந்தார். அடுத்து வந்த கேப்டன் வெயின் பிராவோ முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். முன்றோ 29 ரன்கள் சேர்த்தார்.


    வெற்றி பெற்ற சந்தோசத்தில் கூப்பர்


    அதன்பின் வந்த ஹம்சா தரிக் 18 ரன்னும், டேரன் பிராவோ 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 14.2 ஓவரில் 90 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்திருந்தது நைட் ரைடர்ஸ்.

    8-வது விக்கெட்டுக்கு ராம்தின் உடன் கூப்பர் ஜோடி சேர்ந்தார். அப்போது நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 34 பந்தில் 47 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள்.

    கடைசி 3 ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை காட்ரெல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கூப்பர் சிக்ஸ் அடித்ததால் 11 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஹில்பெனாஸ் வீசினார். முதல் இரண்டு பந்தில் இரண்டு வைடு மற்றும் ஓடி எடுத்த ரன்கள் மூலம் ஐந்து ரன்கள் கிடைத்தது.

    3-வது பந்தை நோபாலாக வீசினார். இந்த பந்தை கூப்பர் சிக்சருக்கு தூக்கினார். நோ-பால் என்பதால் ப்ரீஹிட் கிடைத்தது. அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தையும் பவுண்டரிக்கு துரத்தினார்.


    19-வது ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹில்பெனாஸ்

    கடைசி இரண்டு பந்திலும் தலா ஒரு ரன்கள் எடுக்க டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 137 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹில்பெனாஸ் இந்த ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வெல்லும் 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
    Next Story
    ×