search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஹாட்ஸ்பர் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சியா
    X

    இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஹாட்ஸ்பர் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சியா

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஹாட்ஸ்பர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சியா அணி வெற்றி பெற்றுள்ளது.


    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்று லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செல்சியா, ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் தொடங்கிய 24-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கொஸ் அலோன்ஸோ முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் செல்சியா அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் ஹாட்ஸ்பர் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சியில் செல்சியா அணியின் மிக்கி பத்ஷுயாயின் காலில்பட்டு கோலானது. இதனால் 1-1 என போட்டி சமனானது.

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. போட்டியின் 88-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கொஸ் அலோன்ஸோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சியா முன்னிலை பெற்றது. அதன்பின்னர் கோல் எதும் அடிக்கப்படாததால் செல்சியா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் செல்சியா அணி மூன்று புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 12-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    Next Story
    ×