search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம்
    X

    கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம்

    கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார்.

    ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரைப் பதித்து வருகிறார்கள். இவர்கள் விளையாடும்போதும், விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறார்கள்.

    பிளங்கிங் நெக்லைன்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் உள்ளாடை தெரியும் வகையில் தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து வீராங்கனைகள் விளையாடும்போது மிகவும் ஆபாசமாக தெரிகிறது. இதனால் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம், இந்த வகையான ஆடைகளை அணிந்து விளையாடக்கூடாது என்று கூறியது.



    வீராங்கனைகள் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2-ந்தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இன்றிலிருந்து (ஜூலை 17-ந்தேதி) ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

    இதனால் இன்று முதல் ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. எந்தெந்த ஆடைகள் அணியலாம், எந்தெந்த ஆடைகள் அணியக்கூடாது என்பதை என்பது குறித்து பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் ஒரு மெயில் அனுப்பியுள்ளது. அதன் விவரம்;-

    1.  வழக்கமான காலர் வைத்த பனியன் அனுமதி

    2. பிளங்கிங் நெக்லைன்ஸ் அனுமதி கிடையாது.

    3. ஸ்கார்ட் அல்லது ஷார்ட்ஸ் இல்லாத லெக்கிங்ஸ் அனுமதி இல்லை.

    4. நீளமான ஸ்கர்ட், ஸ்கார்ட் மற்றும் ஷார்ட்ஸ் கீழ் பகுதி தெரியாத அளவிற்கு போதிய நீளம் இருக்க வேண்டும்.

    5. போட்டிகள் தொடர்பான பார்ட்டிகளில் பங்கேற்கும்போது இந்த ஆடைகள்தான் அணிய வேண்டும். தொழில்முறையான படத்திற்கு உங்களுடைய விளையாட்டின் ஆடைகளைத்தான் அணிய வேண்டும். இல்லையெனில், ஜீன்ஸ் அணியலாம், ஆனால், ஓட்டைகள் உள்ள ஜீன்ஸ் அணியக்கூடாது.

    இதுபோன்று மேலும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×