search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. வருமானம் பகிர்வு: இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர்: இங்கிலாந்துக்கு 139 மில்லியன்
    X

    ஐ.சி.சி. வருமானம் பகிர்வு: இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர்: இங்கிலாந்துக்கு 139 மில்லியன்

    ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர் கிடைக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் பிரித்து கொடுக்கப்படும்.

    இதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் அதிக அளவில் வருமானம் பகிர்வு பெற்றிருந்தது. இதற்கு தற்போதைய ஐசிசி தலைவர் ஷஷாங் மனோகர் எதிர்ப்பு தெரிவித்து மாற்றம் கொண்டு வந்தார். இந்தியாவை தவிர மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    இதன்படி இந்தியாவிற்கு 293 மில்லியன் டாலர் கொடுக்க ஐ.சி.சி. முடிவு செய்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் 570 மில்லியன் டாலர் கேட்டது.

    ஆனால், ஐ.சி.சி. 393 மில்லியன் டாலர் வழங்க ஓத்துக்கொண்டது. தற்போது லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதியாக 405 மில்லியன் டாலர் வழங்க ஒத்துக் கொண்டது. இதற்கு பிசிசிஐ சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு 139 மில்லியன் டாலரும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா 128 மில்லியன் டாலரும், ஜிம்பாப்வே அணிக்கு 94 மில்லியன் டாலரும் வழங்க ஐ.சி.சி. ஒப்புக் கொண்டுள்ளது.

    மொத்தம் உள்ள 1536 மில்லியன் வருமானம் பகிர்வில் இந்தியா 22.8 சராசரி வருமான பகிர்வை பெற இருக்கிறது.
    Next Story
    ×