search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை: விராட் கோலி
    X

    கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை: விராட் கோலி

    கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயமே இல்லை என்று நாளைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து விராட் கோலி கூறியுள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்து விராட் கோலி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    இறுதிப்போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாளை விளையாட இருப்பது மற்றொரு போட்டிதான். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக நாங்கள் விளையாடுகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நடைபெற்றது அப்படியே தொடரும் என்று நான் பார்க்கவில்லை.

    சிறப்பாக விளையாட வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள். கடந்த கால புள்ளி விவரங்கள், சாதனைகள் பெரிய விஷயம் அல்ல. எந்தவொரு அணியும் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல. சிறந்த மனநிலையை கொண்டிருக்கும் அணி வெற்றி பெறும்.

    பாகிஸ்தான் அணிக்கு சாதகமான நாளில், அவர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கடுமையான சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று எனக்குள்ளே பார்த்துக் கொள்வேன். அணியை அந்த சூழ்நிலையில் இருந்து என்னால் மீட்க முடியும் என்று எனக்குள்ளே சாதகமாக மாற்றிக் கொள்வேன். நேர்மறையான விஷயங்கள் என்னை போட்டி குறித்து நேர்மறையான சிந்தனைகளை சிந்திக்க வைக்க உதவுகிறது.

    ஹர்திக் பாண்டியா குறித்து எனக்கு கவலையில்லை. அவரை போன்ற ஒரு வீரர் எப்போதும் அணியின் பின்னால் வருவார்கள். எந்தவொரு நேரத்திலும் போட்டியை வெற்றி பெற வைக்கக்கூடிய ஆட்டத்தை கொடுக்க முடியும். இதுவரை அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எந்த நேரத்திலும் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    நான் ஹாக்கி விளையாடியதே கிடையாது. அது மிகவும் அபாயகரமானது. இந்திய அணி நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை நம்புகிறேன்” என்றார்.
    Next Story
    ×