search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக 100 போட்டிகளில் விளையாடிய டி வில்லியர்ஸ்
    X

    தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக 100 போட்டிகளில் விளையாடிய டி வில்லியர்ஸ்

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏபி டி வில்லியர்ஸ் இன்றைய போட்டியின் மூலம் 100-வது போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார்.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டி வில்லியர்ஸ் செயல்படுகிறார்.



    இதன்மூலம் தென்ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 100 போட்டிகளில் பணியாற்றி சாதனைப்படைத்துள்ளார். இதற்கு முன் குரோஞ்சி, ஸ்மித் ஆகியோர் தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக 100 போட்டிகளுக்கு மேல் பணியாற்றியுள்ளனர்.
    Next Story
    ×